மைனர்களை ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யலாம்

jamilஉரிய  வயது  வராத  சிறுவர்களை  அவர்களின்  பெற்றோரில்  ஒருவர்  ஒருதலைபட்சமாக  மதமாற்றம்  செய்வதைக்  கூட்டரசு  அரசமைப்பு  அனுமதிக்கிறது. அதை  மாற்றும்  எண்ணம்  அரசாங்கத்துக்கு  இல்லை.

இன்று,  எம்.குலசேகரனுக்கு(டிஏபி- ஈப்போ  பாராட்)  வழங்கிய  எழுத்து வடிவிலான  பதிலில் பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்   பஹாரோம் இவ்வாறு  கூறினார். அப்படி  மதம் மாற்ற பெற்றோரில் ஒருவரின்  சம்மதமே  போதும்  என்றாரவர்.

“கூட்டரசு  அரசமைப்புப்படி  18வயது  ஆகாத ஒரு  பிள்ளையின்  சமயத்தை  பெற்றோரில்  ஒருவரே  தீர்மானிக்க  முடியும்”, என்று  ஜமில்  கீர்  கூறினார்.

ஆனால், அமைச்சரின்  நிலைப்பாடு  2009-இல்  அமைச்சரவை  செய்த  முடிவுடன்  முரண்படுகிறது.  அப்போது  அமைச்சரவை,  பெற்றோரில்  ஒருவர்  ஒருதலைபட்சமாக  மதமாற்றம்  செய்வது  தடைசெய்யப்படுவதாகக்  கூறியது.

அதற்கான  சட்டத்  திருத்தங்கள்  செய்யப்படும்  என்று  முன்னாள்  சட்ட  விவகார  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  அப்போது  கூறினார்.

ஆனால், இன்றுவரை  சம்பந்தப்பட்ட  திருத்தப்படவில்லை.