சிலாங்கூரில் பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பதில் மேலும் தாமதம்

pbsபைபிள்  விவகாரத்தில்  சிலாங்கூரில்  மாநில  இஸ்லாமிய  அதிகாரிகளும்  மாநில  அரசும்  இன்னும்  உடன்பாட்டுக்கு  வர இயலவில்லை.  இதனால்  பைபிள்களை   மலேசிய  பைபிள்  கழகத்திடம்(பிஎஸ்எம்)  திருப்பிக்  கொடுப்பது  தாமதம்  அடைந்துள்ளது.

ஜனவரில், சிலாங்கூர்  இஸ்லாமிய   விவகாரத்  துறை,  பிஎஸ்எம்-இல்  நடத்திய  அதிரடிச்  சோதனையின்போது  300  பைபிள்கள்  கைப்பற்றப்பட்டன. அவற்றைத்  திருப்பிக்  கொடுக்க  வேண்டும்  என மாநில  அரசும்  மத்திய  அரசும்  விரும்பினாலும்  அவை  இன்னும்  திரும்பக்  கொடுக்கப்படவில்லை.

அந்த  மலாய்  மற்றும்  இபான்மொழி  பைபிள்களில் கிறிஸ்துவ கடவுளைக்  குறிக்க  ‘அல்லாஹ்’ என்னும்  சொல்  பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவை  பறிமுதல்  செய்யப்பட்டன.

அவற்றைத் திருப்பிக்  கொடுக்கக்கூடாது  என்பதில்  சிலாங்கூர்  இஸ்லாமிய  மன்ற (மயிஸ்)  தலைவர்  முகம்மட்  அட்சிப்  இசா-வும்  ஜயிஸ்  துணை  இயக்குனர்  அஹ்மட்  குஸ்ரின்  முனாவிரும் விடாப்பிடியாக இருப்பதாய்   தகவலறிந்த  வட்டாரம்  ஒன்று  கூறியது.