அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு (மோஸ்டி) என்எஸ்இ ரிஸோர்சஸ் சென். பெர்ஹாட்டின் துணை நிறுவனங்களுக்கு ரிம15 மில்லியன் மானியம் கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறது. மோஸ்டி, என்எஸ்இ-க்குப் பிரதமரின் கடிதத்தை அடிப்படையாக வைத்து ரிம100 மில்லியன் மான்யம் தனியே வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாரம் ரபிஸி ரம்லி (பிகேஆர் -பாண்டான்)-க்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சு, என்எஸ்இ-இன் இரண்டு துணை நிறுவனங்களான குளோபல் நெட்வோர்க் டெக்னலோஜி-க்கும் என்எஸ்இ போமார் சென். பெர்ஹாட்டுக்கும் தனித்தனியே மூன்று மானியங்கள் கொடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது. அந்நிறுவனங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மூன்றில் இரண்டு திட்டங்களைப் பூர்த்தி செய்யாத நிலையிலும் அந்த மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், ரபிஸி சொல்வதுபோல் என்எஸ்இ ரிஸோர்சஸ் சென். பெர்ஹாட்டுக்கு ரிம100 மில்லியன் மானியம் கொடுத்ததில்லை என அமைச்சு கூறிற்று.