நாளை, டிஏபி ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர்மீது “அம்னோ செலாகா” என்றுரைத்ததற்காக தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரை ஜாலான் பட்டானியில் உள்ள வடகிழக்கு போலீஸ் நிலையத்தில் சரணடையுமாறு போலீசார் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
“இன்றிரவுக்குள் பிணை கிடைக்க வேண்டும். இல்லையேல், இங்குதான் தூங்க வேண்டும்”, என இராயர் கூறினார்.
அவர்மீதான குற்றச்சாட்டு என்னவென்பது இன்னும் அவருக்கு விளக்கமாகச் சொல்லப்படவில்லை.
இராயர்மீது நாடு முழுவதும் 40-க்கு மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் மியோர் பரிடாலட்ராஷ் வாஹிட் கூறினார்.
அம்னோ செலாக என்றுதானே சொன்னார்… அரசாங்கம் செலாகா என்று சொல்லவில்லையே!!!! கட்சியை சொன்னால் கூட தேச நிந்தனையா???? அண்மையில் தெரெங்கானுவில் “நாதாங்” என்ற சொல்லை யாருக்கோ பயன்படுத்தியதாக கேள்விப் பட்டேன்…அது ஒகே வா???? இதுமட்டுமல்ல, மக்கள் வரி பணத்தினை சுருட்டி கொள்ளையடித்து தேசத்தின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டுச்செல்வதை என்ன நிந்தனை என்று சொல்வது????
அம்னோவை செலாக்கா என்றால் அது தேச நிந்தனையாகத் தான் இருக்க வேண்டும்! தேச நிந்தனைக்கு இது தான் உண்மையான அர்த்தம்!
இதைவிட மீக மோசமான பேச்சுக்களை சட்டமன்றத்திலும்,பாராளுமன்றத்திலும் ஓரினத்தை இழிவுப்படுத்தி பேசினார்களே அப்போது இந்த சட்டமெல்லாம் எங்கே போனது ???
இதெல்லாம் காகாதிர் காலத்து அடக்குமுறை திருகு தாளங்கள். இது என்றுமே தொடரும்– சாமி கம்மனாட்டி நம்மையெல்லாம் மலிவுக்கு விற்று விட்டத்தின் பலன்.
அம்னோ செலாகா மட்டும் இல்லை அதைவிட மேலும்—இந் நாட்டை இந்த நிலைக்கு ஆளாக்கிய இவன்களை இதை விட அதிகமாகவே சொல்லவேண்டும்.
தேசநிந்தனைகக்கும் ஒரு அரசியல் கட்சியை சாடியதிற்கும் என்ன சம்பந்தம்?
இதெல்லாம் சரக்கு இல்லாத சக்கைகளின் வேலை.