இஸ்மா தலைவர்மீதும் நாளை தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

ismaநாளை, காஜாங்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்,  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  தலைவர்  அப்துல்லா  ஸேய்க்  அப்துல்  ரஹ்மான்மீது தேச நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்படும்.

சீன  மலேசியர்களை  “அத்துமீறி  நுழைந்தவர்கள்” என்று  குறிப்பிட்டதற்காக  அவர்மீது  இக்குற்றம்  சாட்டப்படுகிறது.

போலீஸ் பிடியாணை  கிடைத்ததாகவும்  நாளை  நீதிமன்றத்துக்கு  நேரில்  செல்லப்போவதாகவும்  அப்துல்லா  கூறினார்.