மலேசியாகிக்கு எதிராக நஜிப் தொடுத்துள்ள வழக்கில் நீதிபதி கோமதி மாற்றப்பட்டுள்ளார்

 

பிரதமர் நஜிப் மலேசியாகினிக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கை வேறொரு நீதிபதி கேட்கவிருக்கிறார்.abim

நஜிப்பின் வழக்குரைஞர் நிறுவனத்திடமிருந்து மலேசியாகினிக்கு எதிரான வழக்கு சம்பந்தமான நோட்டீஸ் ஜூன் 3 ஆம் தேதி மலேசியாகினியிடம் சார்வு செய்யப்பட்டபோது அதில் இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் கோமதி சுப்பையா முன் வழக்கு பரிசீலனைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இன்று (ஜூன் 18) இவ்வழக்கு துணை பதிவாளர் நோர்பவுஸானியின் முன் நடைபெற்றதாக மலேசியாகினியின் வழக்குரைஞர் அசோக் கந்தையா தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போதுதான் இவ்வழக்கு நீதிபரிபாலன கமிஷனர் கமலுடின் முகமட் ஸைட் முன் விசாரணைக்கு வருகிறது என்று Letter from Najib'sதுணைப் பதிவாளர் தெரிவித்ததாக அசோக் கூறினார்.

நீதிபதி மாற்றம் குறித்து கேக்கப்பட்ட போது, நஜிப் மற்றும் அம்னோவுக்கான வழக்குரைஞர் வான் அஸ்மிர் வான் மஸ்ஜிட் முதலில் நியமிக்கப்பட்டவர் நீதிபதி கோமதிதான் என்பது பற்றி தமக்கு உறுதியாகத் தெரியாது என்றார்.

நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா ஆகியோருக்கு எதிராக பி. பாலசுப்ரமணியத்தின் துணைவியார் செல்வி தொடுத்துள்ள வழக்கையும் விசாரிக்கும் நீதிபதியாகவும் கமலுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பு: நஜிப் மற்றும் அம்னோ தொடுத்துள்ள வழக்கு சம்பந்தமான 30 பக்க பத்திரங்களில் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் கோமதி சுப்பையா முன் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.