கேஜே: ஒருதலைபட்ச மதமாற்றம் செல்லாது-அன்றும் இன்றும் இதுதான் கொள்கை

kj2009-இல்   அமைச்சரவையில்  செய்யப்பட்ட  ஒருதலைப்பட்ச  மதமாற்றம்  செல்லாது  என்ற  முடிவே  இன்னமும்  அமலில்  உள்ளது  என  கைரி  ஜமாலுடின்  கூறுகிறார்.

“பராமரிப்பு  விவகாரங்கள்  தொடர்பில்  இதுவே அன்றும்  இன்றும்  அமைச்சரவையின்  நிலைப்பாடாகும்.

“திருமணம்  செய்துகொண்டபோது  பெற்றோர்களின்  சமயம்  எதுவோ  அதற்கு  நாம்  மதிப்பளிக்க  வேண்டும்”, என  இளைஞர், விளையாட்டுத்துறை  அமைச்சரான  அவர்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

அரசமைப்பு பெற்றோரை ‘parent’என்றுதான்  குறிப்பிடுகிறது. இது  ஒருவரைக்  குறிப்பிடுகிறதா,  இருவரையும்  குறிக்கிறதா  என்பதில் ஒரு தெளிவில்லை. அதைத்  தெளிவுபடுத்தும்படி  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்லுக்கும்  மற்ற  அமைப்பினருக்கும்  பணிக்கப்பட்டுள்ளது.

“அதை  விரைவில் தெளிவுபடுத்த  வேண்டும்”, என  கைரி  குறிப்பிட்டார். இல்லையேல், அது  ஒருவரைக்  குறிக்கிறதா, இருவரையும்  குறிக்கிறதா  என்ற  ஐயம்  இருந்துகொண்டே  இருக்கும்.