பிகேஆர் உதவித் தலைவரும் பாடாங் செறாய் எம்பி-யுமான என். சுரேந்திரன் நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாதகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சுரேந்திரனை இடைநீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது துணை அமைச்சர் ஒருவருடன் சர்ச்சையிட்ட பிகேஆர் துணைத் தலைவரும் கோம்பாக் எம்பி-யுமான அஸ்மின் அலியும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அப்போது பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் “இரப்பர் முத்திரை” என்று ஒருசேர உரக்கக் குரல் எழுப்பினார்கள். சுரேந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களில், அவர் நாடாளுமன்றம் ஒரு இரப்பர் முத்திரைபோல் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியதும் ஒன்றாகும்.
நடந்த சம்பவங்களால் ஆத்திரமடைந்திருந்த எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், “அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் உண்மையில் ஓர் இரப்பர் முத்திரைதான்”, எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இனியும் யாரும் நாடாளுமன்றத்தில் வாயை திறக்காதீர் . மக்கள் தேர்வு செய்த உறுப்பினர் கேள்விகளுக்கு பதில் கிடையாதா . புங் போன்ற மூடர்கள் பேசலாம் ….
முதலில் அவைத்தலைவரை இடைநீக்கம் செய்யவேண்டும்.பார்லிமெண்டில் எதிர்கட்சிக்காரர்களுக்கு கேள்வி கேட்க்க வாய்ப்பளிக்காத ஒருவர் அவைத்தலைவராக இருப்பது நியாயமில்லை.