மலேசிய பைபிள் கழகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 321 பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பதா அழித்துவிடுவதா என்பதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷா கூறியுள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில இஸ்லாமிய துறை(ஜயிஸ்)க்கு அவர் உத்தரவிட்டார்.
“நீதிமன்றம் இறுதி முடிவு செய்வதற்கு ஏதுவாக, ஜயிஸ், இவ்விவகாரத்தை அரசுதரப்பு வழக்குரைஞரின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்”, என சுல்தான், அவரின் தனிச் செயலாளர் முகம்மட் முனிர் பானி விடுத்த அறிக்கையில் கூறினார்.
ஆனால், விவகாரத்தை எந்த நீதிமன்றத்துக்கு- சிவிலுக்கா, ஷியாரியாவுக்கா- கொண்டு செல்வது என்பதை ஆட்சியாளர் குறிப்பிடவில்லை.
உலகின் மிக சிறந்த சுல்தான் நீங்கள்தான் ஐயா…
நாட்டின் IGP நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காதபோது, இஸ்லாமிய துறை(ஜயிஸ்) நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என கூறுவது கோமாளித்தனம்.