மக்களவைத் தலைவர்: மலேசியா சமயச் சார்பற்ற நாடல்ல

spaekerஇஸ்லாம் நாட்டின்  அதிகாரப்பூர்வ  சமயம்  என்பதால்  மலேசியா  சமயச்  சார்பற்ற  நாடல்ல  என்கிறார்  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா.

பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோமை  உரிமைகள், சலுகைகள்  குழுவின்  விசாரணைக்கு  அனுப்ப  வேண்டும்  என்று  கூறப்பட்டதை  நிராகரித்தபோது  அவர்  இவ்வாறு  கூறினார்.

“ஒரு  சமயச்  சார்பற்ற  நாடு என்றால்  அதற்கு  எந்தவொரு  சமயத்துடனும்  தொடர்பு  இருக்கக்  கூடாது. அமெரிக்கா,  இந்தியா,  துருக்கி  முதலிய  நாடுகள்  அப்படித்தான்.  நம்  நாட்டில் இஸ்லாம்தான்  அதிகாரப்பூர்வ  சமயம்  என்று  தெளிவாகவே  கூறப்பட்டுள்ளது”, என  பண்டிகார்  கூறினார்.

இது  தம்  தனிப்பட்ட  கருத்துதானே  தவிர  “அரசாங்க”க்  கருத்தல்ல  என்பதையும்  அவர்  குறிப்பிட்டார். .