இஸ்மா தலைவர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட டிஏபி-தான் காரணம்

ismaஈக்காத்தான்  முஸ்லிமின்   மலேசியா(இஸ்மா),   டிஏபி  திட்டங்களைத்  தொடர்ந்து  சாடிவருவதுதான்  அதன்  தலைவர்  அப்துல்லா  ஸேய்க்  அப்துல்  ரஹ்மான்   தேச நிந்தனைக்  குற்றம்   சுமத்தப்பட்டு  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டதற்குக்  காரணமாகும்  என  நம்புகிறது.

மேலும்  பலர்,  பல்வேறு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டு  நிதிமன்றத்தில்  நிறுத்தப்படும்  சாத்தியம்  இருப்பதாக  அவ்வமைப்பின்  உதவித்  தலைவர்  முகம்மட் பவுசி  அஸ்முனி  இன்று  எச்சரித்தார்.

அப்துல்லா  ஸேய்க்,  மே  6-இல்  இஸ்மா  வலைத்தளத்தில்  சீன  மலேசியர்களை ‘அத்துமீறி  நுழைந்தவர்கள்’  என்று  குறிப்பிட்டதற்காக  இன்று  அவருக்கு  எதிராக  தேச நிந்தனைக் குற்றம்  சுமத்தப்பட்டது.