‘என் கணவர்மீது குற்றம்சாட்டுவது மலாய் இனத்தின்மீது குற்றம்சாட்டப்படுவதற்கு ஒப்பாகும்’

salekaநோர்  சலேஹா  முகம்மட்  சாலே, தம்  கணவரான  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா) தலைவர்  அப்துல்லா  ஸேய்க்  அப்துல்  ரஹ்மான்மீது  தேச  நிந்தனைக்  குற்றம்  சாட்டிய  அதிகாரிகளைக்  குறை  கூறினார்.

அவர்மீது  குற்றம்  சாட்டப்பட்டிருப்பது  மலாய்க்காரர்களையே  இழிவுபடுத்தும்  செயலாகும்  என்றவர்   குறிப்பிட்டார்.  அவர்,  இன்று  காஜாங்  செசன்ஸ்  நீதிமன்றத்தில்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

“அக்குற்றச்சாட்டு  மலாய்க்காரர்களை இழிவுபடுத்துகிறது. என்  கணவர்  மலாய்ப்  போராட்டத்தின்  அடையாலச்  சின்னமாகத்  திகழ்ந்தவர்”, என  யுனிவர்சிடி  இஸ்லாம் சிலாங்கூர்  கல்லூரியின்  விரிவுரையாளரான  நோர்  சலேஹா  கூறினார்.