சட்டமன்ற தலைவரின் ஒப்புதலின்றி அவை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்க எடுக்க இயலாது, தெரியுமா?

 

Penang Speakerபோலீசும் சட்டத்துறை தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் புரியும் எந்த ஒரு குற்றத்திற்காகவும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று பினாங்கு சட்டமன்ற தலைவர் லா சூ கியாங் கூறினார்.

சட்டமன்ற தலைவரின் ஒப்புதல் இன்றி அதிகாரத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்றாரவர்.

“ஆகவே, இதன் அடிப்படையில் ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் மீது 1948 ஆம் ஆண்டு தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவிருந்த திட்டம் ரத்து ஆகிறது”, என்று லா நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தின் நிலை ஆணைகளின் கீழ் “அம்னோ செலாகா” என்ற சொல்லை அவர் மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று ராயருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் லா கூறினார்.

சட்டமன்ற நிலை ஆணைகளுக்கு ஒப்ப ராயர் உதிர்த்த சொல்லால் அதிருப்தியடைந்துள்ள 10 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கு சிறப்பு அசெம்பிளி குழு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வகைசெய்யும் ஓர் அவசர தீர்மானத்தை கொணருமாறு தாம் கூறியதாக லா மேலும் தெரீவித்தார்.

“ஆனால், அதற்கான போதுமான வாக்குகளைப் பெற அம்னோ தவறி விட்டதால், அதற்கு மேல் எதுவும் செய்யப்படவில்லை”, என்று அவைத் தலைவரான லா விளக்கினார்.

“நான் நிலை ஆணைகளின் அடிப்படையில் அந்த முடிவுகளை எடுத்தேன். ஆகவே, இச்சம்பவம் குறித்த எந்த புறம்பான நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”, என்று லா கூறினார்.

கடந்த புதன்கிழமை, தேசநிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில் போலீசாரும் சட்டத்துறை தலைவரும் ராயரை கைது செய்ததின் மூலம் சட்டமன்றத்தின் புனிதத்தன்மைக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது குறித்து லா வருத்தப்பட்டுக் கொண்டார்.