கையூட்டுக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் அரசு அதிகாரி

hasmiமகளிர், குடும்ப, சமூக  மேம்பாட்டு  அமைச்சின்  உயர்  அதிகாரி  ஒருவர்,  அவர்மீது  சுமத்தப்பட்ட  ஊழல்  குற்றச்சாட்டுகளுக்கு  எதிராக  விசாரணை  கோரியுள்ளார்.

ஹஸ்மி  சம்சுடின் (முகத்தை  மறைத்துக்  கொண்டிருப்பவர்),  பேராக்கில்  மேற்கொள்ளப்படும்    ரிம600,000 பெறுமதியுள்ள  திட்டங்களில்  10விழுக்காடு  கையூட்டு  பெற்றதாக  கோலாலும்பூர்  செசன்ஸ்  நீதிமன்றத்தில்  குற்றம்  சாட்டப்பட்டது.

அவர், கோலாலும்பூர், புக்கிட்  பெர்டானாவில்  உள்ள  அமைச்சுக்  கட்டிடத்தில்  கையூட்டுப்  பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக்  கூறப்பட்டது.

ஹஸ்மிக்கு  எதிராக  ஆறு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டுள்ளன.