காணாமல்போன மலேசிய விமானத்தைத் தேடும்பணி மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெர்துக்கு 1,,800 கிலோ மீட்டர் மேற்கே அதைத் தேடும் பணி மேற்கொள்ளப்படும்.
எம்எச்370-ஐத் தேடும்பணி முதலில் அங்குதான் தொடங்கியது. பிறகுதான் அங்கிருந்து மேலும் வடக்கு நோக்கிச் சென்றது. ஆனால், வல்லுனர்கள் விமானம் இந்தத் தெற்குப் பகுதியில் விழுந்திருக்கும் “சாத்தியக்கூறுதான்” அதிகம் என்ற கருத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த இடமாற்றம் தொடர்பில், தேடும்பணிக்குப் பொறுப்பான கூட்டு ஒருங்கிணைப்பு மையம் அடுத்த வாரம் அறிவிப்பு ஒன்றைச் செய்யும் என மேற்கு ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று கூறியது.
இன்னும் எத்தனை மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்கு இப்படி தேடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாகிப் போச்சு. அங்கே இருந்து ‘பிங்’ ஒலி வருகின்றது என்று தேடும் பணியை திசை திருப்பியது. சீனாவின் தேடல் பணியாளர்கள். பின்னர் அங்கிருந்து வரும் இரட்டை ‘பிங்’ ஒலி விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வரக் கூடிய ஒலியலை வரிசையில் இருந்துதான் வருகின்றது ஆணித்தரமாக அறிக்கை விட்டு இப்பொழுது மீண்டும் திசையை திருப்பவது ஏன்?. அவ்வாறு ஒலியலை வருவதருக்கு சீனா செய்த தந்திரம்தான் என்ன?. சீன பயணிகள் அனைவரும் உயிருடன் இருப்பதர்க்கு சாத்தியமில்லாத போது சீன கப்பல்கள் வெகுவாக இந்த தேடும் பணியில் ஈடுபடுவதின் நோக்கமென்ன?. சீனாவுக்கு இந்த விமானத்தில் கொண்டு செல்லப் பட்ட சரக்கின் மீது ஏதோ பற்று இருக்கவேண்டும்!. அது பிறருக்கு தெரியாவண்ணம் மறைக்கும் எண்ணம் சீனாவுக்கு இருக்க வேண்டியுள்ளது. அதுவே சீனா மலேசிய பிரதமருக்கு சீனா வருகையின் போது கொடுத்த சிறப்பு கவனிப்பு. பிரதமர் மலேசியா வந்து உடனடியாக மீண்டும் சீனா செல்ல வேண்டியதின் அவசியம் என்ன?. பேசி முடியாத விடயங்கள் நிறையவே இருந்ததோ?. கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வராமலா போய் விடும்.
அதே விமானம் வேற சாயம் பூசி,klia -2 ல் இறங்கினால் ஒரு பயலுக்கும் தெரியாது .
இறுக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தை தேடுகிறார் ஞான தங்கமே