ஐபிபி-கள் தேவையில்லை என்கிறது மலாய் என்ஜிஓ

ippசுயேச்சை  மின்  உற்பத்தியாளர்களே  தேவையில்லை  என்றும்  அவர்களை  விட்டொழிக்குமாறும்  மலாய்  ஆலோசனை மன்றம்(எம்சிசி)  அரசாங்கத்தைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஜோகூரில்  ரிம3பில்லியன்  மின் ஆலை  அமைக்கும்  திட்டம்  அமைக்கும் குத்தகை  வழங்கப்பட்டு  அதிலிருந்து  விலகிக்கொள்ள  ஒய்டிஎல் நிறுவனம்  முடிவுசெய்ததை  அடுத்து  அது  இவ்வாறு  கோரிக்கை  விடுத்தது. அக்குத்தகை,  ஒய்டிஎல்  நிறுவனம்,  ஜோகூர்  சுல்தான்  சம்பந்தப்பட்ட நிறுவனம்,  தெனாகா  நேசனல்  பெர்ஹாட் (டிஎன்பி)  ஆகியவை இடம்பெற்றுள்ள  ஒரு  குழுமத்துக்கு  நேரடியாக  வழங்கப்பட்டது.

டிஎன்பி  மட்டுமே மின்  உற்பத்திக்கு  செய்த  அந்தப்  பழைய  நாள்கள்  திரும்ப  வேண்டும்  என  எம்சிசி  தலைமைச்  செயலாளர்  ஹசன்  மாட்  கூறினார்.

வருங்காலத்தில்  மின்  உற்பத்திக்  குத்தகைகள் அனைத்தும்  டிஎன்பி-க்கு  மட்டுமே  கொடுக்கப்பட  வேண்டும்  என்றாரவர்.