வறட்சிக் காலத்தில் ஈயக்குட்டை நீரில் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம்

waterசிலாங்கூர்  அரசின்  இப்போதைய  சோதனைகள்  ஈயக்குட்டை  நீர்  குடிப்பதற்குப்  பாதுகாப்பானது என்பதைக்  காண்பிக்கலாம்.  ஆனால், வறட்சிக்  காலத்தில்  நிலைமை  மாறும்  என்கிறார்  கிள்ளான்  எம்பி  சார்ல்ஸ்  சந்தியாகு.

நீர்  நிறைய  இருக்கும்போது  நச்சுத்தன்மை  வாய்ந்த  கனரக உலோகங்கள்  அதில்  கரைந்து  குடிப்பதற்குப்  பாதுகாப்பானதாக  இருக்கலாம்.

ஆனால்,  வறட்சிக் காலத்தில்  நீரின்  அளவு  குறையும்போது  உலோக  நச்சுத்தன்மையின்  அடர்த்தி  அதிகமாகும். நல்ல  நீர்  நச்சு  நீராக  மாறும்.

“மழைக் காலத்திலும்  கோடைக்  காலத்திலும்  நீரின்  அளவைப்  பொருத்து  கனரக  உலோகங்களின்  கரையும்  நிலையும்  மாறுபடுகிறது”,  என்றாரவர்.