அல்லா வழக்கில் மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு

 

Seven judgesபெடரல் நீதிமன்ற ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 4க்கு 3 பெரும்பான்மையில் மலேசிய கத்தோலிக்க தேவாலாயம் அல்லா என்ற சொல்லை பயன்படுத்துவது மீதான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்திற்கு முறையீடு செய்வதற்கு அனுமதி கோரியிருந்த மனுவை இன்று  நிராகரித்தது.

இன்று அளிக்கப்பட்ட இத்தீர்ப்பை தலைமை நீதிபதி அரிப்பின் ஸாகாரியா, மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் முகமட் ராவுஸ் ஸரீப், மலாயா தலைமை நீதிபதி ஸுல்கிப்லி அஹமட் மகினுடின் மற்றும் பெடரல் நீதிமன்ற நீதிபதி சுரியாடி ஹலிம் ஒமார் ஆகியோர் ஆதரித்தனர்.

மனுவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள்: சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும்,  பெடரல் நீதிமன்ற நீதிபதி ஸைனுன் அல் மற்றும் பெடரல் நீதிமன்ற நீதிபதி ஜெப்ரி டான் கோக் வா ஆகியோர்.

இத்தீர்ப்பு கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட்டிற்கு எதிரான மேல்முறையீட்டு நீதுமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்துகிறது.

இவ்வழக்கு இத்துடன் முடிவிற்கு வருகிறது.