தேவாலயம்: தீர்ப்பு ‘பெரிதும் ஏமாற்றமளிக்கிறது’

fatherகூட்டரசு  நீதிமன்றத்தின்  தீர்ப்பைக்  கேட்டு  “பெரிதும்  ஏமாற்றமடைந்ததாக” கத்தோலிக்க  வார  ஏடான  த  ஹெரால்ட்-இன் ஆசிரியர்  பாதர்  லாரன்ஸ் எண்ட்ரு  கூறினார்.

நீதிமன்றத்துக்கு  வெளியில்  செய்தியாளர்களிடம்  பேசிய  எண்ட்ரு,  மேல்முறையீட்டுக்கு  அனுமதிமறுத்த  நான்கு  நீதிபதிகளும்   சிறுபான்மை  மக்களின் அடிப்படை  உரிமைகள்  பற்றி  எதுவும்  கூறவில்லை  என்றார்.

கூட்டரசு  நீதிமன்றத்தில்,  மேல்முறையீட்டுக்கு  அனுமதிமறுக்கப்படுவதாக  தலைமை நீதிபதி அரிப்பின் ஸாகாரியா  தீர்ப்பளிக்க,   மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் முகமட் ராவுஸ் ஸரீப், மலாயா தலைமை நீதிபதி ஸுல்கிப்லி அஹமட் மகினுடின் மற்றும் பெடரல் நீதிமன்ற நீதிபதி சுரியாடி ஹலிம் ஒமார் ஆகியோர்  அதனை ஆதரித்தனர்.

ஆனால், எழுவரடங்கிய நீதிபதிகள்  குழுவில்,  மூவர்  அத்தீர்ப்புடன்  ஒத்துப்போகவில்லை. சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும்,  பெடரல் நீதிமன்ற நீதிபதி ஸைனுன் அல் மற்றும் பெடரல் நீதிமன்ற நீதிபதி ஜெப்ரி டான் கோக் வா ஆகியோரே  அம்மூவருமாவர்.

அம்மூவரின்  தீர்ப்பு  “துணிச்சல்மிக்கது”  என  எண்ட்ரு  பாராட்டினார்.