நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறப்பட்டது
இதைத் தெரிவித்த முகம்மட் சாலேயின் வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா, அம்மனு செப்டம்பர் 30-இல் விசாரணைக்கு வருகிறது என்றார்.
இதனைக் கருத்தில்கொண்டு சாலேக்கு எதிரான வழக்குகளை ஒத்திவைக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அவரது கோரிக்கையைப் புறந்தள்ளிய நீதிபதி நோர்ஷரிடா ஆவாங், திட்டப்படி சாலேக்கு எதிரான வழக்குகள் ஜூன் 23-இலிருந்து 26வரை நடைபெறும் என்றார்.
முன்னாள் அமைச்சரான ஷரிசாட் அப்துல் ஜலிலின் கணவரான முகம்மட் சாலேமீது நம்பிக்கை மோசடி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும் 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டங்களை மீறீயதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.