வெவ்வேறு இனங்களுக்கிடையிலான குழந்தை பராமரிப்புச் சர்ச்சைகளில் நடுவுப் பாதையே தம் கொள்கை என்று அறிவித்த இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இப்போது வாயைத் திறக்காமல் மெளனம் காக்கிறார்.
போலீஸ், எம். இந்திரா காந்தியின் மகளை மதமாறிய அவரின் தந்தையிடமிருந்து மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு குறித்து வினவியதற்கு போலீஸ் படைத் தலைவர் பதில் உரைக்கவில்லை.
முன்பு, இப்படிப்பட்ட சச்சரவுகளில் “நடுவுப்பாதை”யில் செல்லப்போவதாகக் கூறிய அவர், குழந்தைகளைப் பராமரிப்பு மையங்களில் விட்டுவிடுவதே நல்லது என்றும் பரிந்துரைத்தார். அப்படிச் சொன்னதற்காக பலத்த கண்டனத்துக்கும் ஆளானார்.

























