கிறிஸ்துவர்கள், ஹெரால்ட் வார இதழில் இனி ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் ஆனால், மற்ற இடங்களில் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பு (சிஎப்எம்) இன்று கூறியது.
முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு கத்தோலிக்க வார இதழான ஹெரால்டில் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்துவதை மட்டுமே கட்டுப்படுத்துகிறது என்று முன்பு சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இருப்பதைக் கிறிஸ்துவ அமைப்புகளின் கூட்டமைப்பான அது நினைவுபடுத்தியது.
அந்த வகையில், பைபிள்களிலும், பகாசா மலேசியா- பேசுவோர் கலந்துகொள்ளும் தேவாலய வழிபாடுகளிலும் ‘அல்லாஹ்’ என்று சொல்ல கிறிஸ்துவர்களுக்கு உரிமை உண்டு என சிஎப்எம் தலைவர் ரெவரெண்ட் இயு ஹொங் கூறினார்.
அப்படி என்றால் பைபிள்களைத் திரும்பத்தரவேண்டுமே..? தருவார்களா? தந்தால்..? தன்மானம் குத்துமே…குடையுமே… என்ன செய்வார்கள்?
கொடுத்துவிட்டால் BN நிலைக்கும் மறுத்தால் காணாமல் போகும் ! சபாவும் சரவாக்கும் வெய்க்க போகுது ஆப்பு !
அப்படியா? இனி பொது இடங்களிலும் அல்லா என்னும் வார்த்தையைப் பயன்படுத்தலாம் தானே! எந்த அல்லா என்று பேச்சு வராதே!