நாற்காலிகளை எறியும் கட்சியைப் பின்பற்றாதீர்கள்: அரசு அதிகாரிகளுக்கு நஜிப் அறிவுரை

chairஅரசியலில்  கருத்துவேறுபாடுகள்  தோன்றும்போது  வன்முறையில்  இறங்கக்கூடாது  என்று  மாவட்ட  அதிகாரிகளுக்கு  அறிவுறுத்திய  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்,  அதையே  வாய்ப்பாகக்  கொண்டு  பிகேஆரையும்  சாடினார்.

புத்ரா  ஜெயாவில்  மாவட்ட  அதிகாரிகளின்  கூட்டமொன்றில்  பேசிய  நஜிப், “பிரச்னை  வந்தால்  நன்றாக  விவாதியுங்கள்.  ஆனால்,  அண்மையில்  ஒரு  அரசியல்  கட்சியின்  தேர்தல்களில்  நடந்ததுபோல்  நாற்காலிகளைத்  தூக்கி  எறியாதீர்கள்”,  என்றார்.

ஞாயிற்றுக்கிழமை  கோத்தா ராஜா மறு-தேர்தலின்போது  நிகழ்ந்த  சம்பவத்தைத்தான்  நஜிப்  தம்  பேச்சில்  குறிப்பிட்டார்  என  உத்துசான்  மலேசியா  அறிவித்திருந்தது. அச்சம்பவம்  பிகேஆர் “சம்சிங்குகளையும்  குண்டர்களையும்”  கொண்ட கட்சி  என்பதைக்  காண்பிப்பதாக  அது  கூறிற்று.