மலேசிய தற்காப்பு ரேடார், உயரத்தைச் சரியாக அளவிடும் திறன்கொண்ட ஒரு கருவியல்ல என்றும் அதன் காரணமாகவே எம்எச்370 காணாமல்போனபோது அது பறந்துகொண்டிருந்த சரியான உயரத்தைக் கணிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாகத்தான் விமானத்தைத் தேடும் இடம் மாறுகிறது என அடையாளம் கூறப்படாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியு யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. புதிய இடத்தில் தேடுவதென முடிவு செய்யப்பட்டாலும் அந்த இடம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மலேசிய இராணுவ ரேடார் கருவி பற்றி கூட்டு ஒருங்கிணைப்பு மையத் தலைவர் ஆங்குஸ் ஹுஸ்டனும் ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு நிறுவன ஆணையரும் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், அது நம்பத்தக்கதல்ல என்பதை இருவரும் ஒப்பினர்.
“உயரத்தைப் பொருத்தவரை அந்த ரேடாரின் கணக்கு நம்பத்தக்கதல்ல”, என ஹூஸ்டன் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
மலேசியா BN கட்சிக்கரனும் கேவலமனவணுங்க அந்த கருவியை போலவே நம்ப முடியாத கெட்ட நமரட்டனுங்கள்