புகைமூட்டம் இரண்டாவது தடவையாக நாட்டைச் சூழ்ந்துகொண்டுள்ள வேளையில் போர்ட் டிக்சனிலும் பந்திங்கிலும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு(ஏபிஐ) ‘ஆரோக்கியத்துக்குக் கேடு செய்யும் வகையில்’ இருப்பது பதிவாகியுள்ளது.
போர்ட் டிக்சனிலும் பந்திங்கிலும் ஏபிஐ குறியீடு முறையே 101, 118 எனப் பதிவாகியுள்ளன. ஏபிஐ குறியீடு 100-ஐத் தாண்டினாலே ஆரோக்கியத்துக்குக் கெடுதல் எனக் கருதப்படுகிறது.
புகைமூட்டத்துக்கு இந்தோனேசியாவில் மத்திய சுமத்ராவில் காடுகள் பற்றி எரிவதுதான் காரணம் என்று இயற்கைவள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி. பழனிவேல் நேற்றுக் கூறினார். அது செப்டம்பர்வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்புமிகு பழனிவேல் ஐயா அவர்களே, அது எப்படி எப்பொழுதும் ஒரே பதிலை சொல்லி அருமையாக சமாளிக்கிரீங்க நீங்க?
சோதா பையனுக்கு என்ன முடியும்? ஜால்ரா போடா மட்டும் தான்.
புகை மூட்டத்துக்கு காரணம் இந்தோனேசியக் காடுகள் பற்றி எரிகிறது, என்பது பழைய பல்லவி, கேமரன் மலை காடுகள், குறைந்தது ஒரு நாளைக்கு பத்து ஏக்கர் வரை பற்றி எரிகிறது, என்பது புதிய செய்தி. சுற்றுப்புறச்சூழலை நாசம்மாக்கும் அமைச்சின் இந்த செய்கைக்கு பொறுப்பேற்று சந்நியாசி பழனிவேல் பதவி துறக்க வேண்டும்.
இது BN BARANG NAIK கட்சியின் ஊழல் அட்டகாசம் பொறுக்க முடியாமல் இறைவன் மலேசியா BN காரனை அழிக்க எடுத்த முதல் நடவடிக்கையே என்பதை கருட புராணத்தில் விலா வாரியாக விளக்கம் தரப்பட்துள்ளது