பெர்காசா ஊழல் பக்கம் கவனத்தைத் திருப்புகிறது

ibrahimமலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி),  இயல்புமீறி  ஆடம்பர  வாழ்க்கை  நடத்தும் பணி ஓய்வுபெற்ற  அரசு  அதிகாரிகளைக்  கண்காணிக்க  வேண்டும்  என்று  பெர்காசா  இன்று  கேட்டுக்கொண்டது.

சிலர்  அரசாங்கப்  பணிகளில்  ஈட்டிய  வருமானத்துக்குச்  சற்றும்  பொருந்தாத  வகையில்  ஆடம்பரமாக  செலவு  செய்துகொண்டும்,  பெரிய, பெரிய  வீடுகளில்  வாழ்ந்து  கொண்டிருப்பதையும்  பார்க்கையில்  நெஞ்சு  பொறுக்குதில்லை  என்று  அந்த  மலாய்  என்ஜிஓ-வின்  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார்.

“இப்படிப்பட்டவர்களையே  எம்ஏசிசி  குறி வைக்க  வேண்டும். கண்காணிக்க  வேண்டும். பிடித்து  அமுக்க  வேண்டும்…….அவர்களைப்  பார்க்கையில்  ஆத்திரம்  ஆத்திரமாக  வருகிறது”, என்றாரவர். பூமிபுத்ரா-ஆதரவுக்  கொள்கைகளின்  குறைபாடுகளை  அடையாளம்காண  22  என்ஜிஓ-க்களுடன்  வட்ட-மேசைக்  கூட்டம்  நடத்திய  பின்னர்  இப்ராகிம்  அலி  செய்தியாளர்களிடம்  பேசினார்.