மாநில பிஎன்: பினாங்கில் முதலீடு 82விழுக்காடு குறைந்திருக்கிறது

tengமுதலமைச்சர்  லிம்  குவான்  எங்  காலவதியான  புள்ளிவிவரங்களைக் காண்பித்து  ஏமாற்றப்  பார்க்கிறார்  என்று  குறைகூறிய  பினாங்கு   பிஎன்,  ஆகக்  கடைசியாகக்  கிடைத்த  தகவலின்படி  மாநிலத்துக்கு  வந்த  அந்நிய  நேரடி  முதலீடு(எப்டிஐ) 2010-இலிருந்து  82 விழுக்காடு  குறைந்துள்ளது  எனக்  கூறியது.

2013  ஆகஸ்ட்  வரைக்குமான  எப்டிஐ   புள்ளிவிவரங்களைத்தான்  லிம்  கொடுத்தார்  என  மாநில பிஎன்  தலைவர்  டெங்  சாங்  இயோ  தெரிவித்தார்.

மலேசிய முதலீட்டு  மேம்பாட்டு  வாரியம் (மிடா), 2013  முழுமைக்குமான  புள்ளிவிவரங்களை  அதன்  வலைத்தளத்தில்  வெளியிட்டிருக்கிறது  என  டெங் கூறினார்.

அதன்படி,  பினாங்கின்  எப்டிஐ, 2010-இல் ரிம10.4 பில்லியனாக  இருந்து   2013-இல்,  ரிம1.7 பில்லியனாக  அதாவது  கிட்டதட்ட  82 விழுக்காடு   குறைந்துள்ளதை  டெங்  சுட்டிக்காட்டினார்.

“எனவே,  பினாங்கு  அரசு,  பினாங்கில்  முதலீட்டு  நிலவரம்  வசீகரமாக  இருப்பதாகக்  காண்பிப்பதற்காகவே   நாட்டில்  அதிகமான  எப்டிஐ  பெறும்  மாநிலம் பினாங்குதான்  என்று  கூறிக்கொண்டிருக்கிறது  என்பது  தெளிவு.

“இது  தவறான  தகவல்களைத்  தருவது  மட்டுமல்ல,  மக்களை  ஏமாற்றுவதுமாகும்”,  என  டெங்  குறிப்பிட்டார்.