இஸ்லாத்தையும் சிலாங்கூர் சுல்தானையும் அவமதிப்போரின் “தலை துண்டிக்கப்படும் ” என்று கூறியதற்காக பல தரப்பினரின் கண்டனத்துக்கு ஆளான பெர்காசா தகவல் தலைவர் ருஸ்லான், இப்போது “ஒரு பேச்சுக்காகவே” அப்படிச் சொல்லியதாக கூறிக்கொள்கிறார்.
தலை துண்டிக்கப்படும் என்று கூறியது உண்மைதான். ஆனால், எம்பிகளான காலிட் சமத் (ஷா ஆலம்), டாக்டர் சித்தி மரியா மஹ்மூட்(கோத்தா ராஜா), ஹனிபா மைடின் (செப்பாங்), சே ரோஸ்லி சே மாட் (ஹுலு லங்காட்) ஆகியோரின் அரசியல் வாழ்க்கையைக் “கொல்லும்” அர்த்தத்திலேயே அவ்வாறு சொன்னதாக ருஸ்லான் விளக்கம் அளித்துள்ளார்.
“நான் தலையை ‘pancung’ (வெட்டுவது) செய்வது பற்றிச் சொல்ல நினைக்கவில்லை. அவர்களின் அரசியல் வாழ்க்கையை ‘pancung’ செய்வது பற்றித்தான் சொல்ல நினைத்தேன். தவறுதலாக ‘pancung leher'(கழுத்தை வெட்டுதல்) என வந்து விட்டது”.
“நாங்கள் ஒன்றும் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கவில்லை. எங்களுக்கு அமைதிதான் பிடிக்கும். இணக்கமாக வாழ்வதுதான் பிடிக்கும்”, என்று கூறிய ருஸ்லான் மலேசியாகினிதான் அதைப் பெரிதுபடுத்தி விட்டது என்றார்.
பாவம் சுருங்கிவிட்டது போலும்… என்ன பேசவேண்டும் என்பதை சிந்திக்காமல் பேசினால் இதுதான் கதி.
ஹி ஹி ஹி மலேசிய ரசிகர்களுக்கு ஒரு வடிவேலு கிடைத்து விட்டான் இனி வீடுகளில் ஒரே சிரிப்பு தான் ….
நீ ஏன் இப்படி உளறுகிறாய் .. உன் தலையில் பெரிய பாரங்கல்லை தூக்கி போடனும்போல இருக்கு.
சொன்னதை இல்லை என்று சாதிக்கும் இவர்கள் நல்லவர்கள். ஆனால் இதையே எதிர்க்கட்சி காரன் யாராவது சொல்லி இருந்தால் இந்நேரம் அவர்கள் கம்பி எண்ண வேண்டியதுதான். IGP க்கு இதெல்லாம் தெரியாதா?
அட அட அட எப்படி எல்லாம் நடிக்ன்றிர்கள் நடிகர் சிவாஜி தோற்று போய் விடுவர் சாமி !!!!!!!!!!!!!
அப்படி அட்ரா பல்டிய!
நாம் இந்த வார்தை சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும் ??
பினாங் ரயர் சொன்னதில் தப்பு எதும் இல்லை.