தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் (எனயுசிசி) முன்மொழிந்துள்ள மூன்று நல்லிணக்க சட்டவரைவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அம்னோவிலிருந்து வெளியேறப் போவதாக பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசன் சைட் அலி கூறினார்.
“நான் அம்னோவிலிருந்து விலகுவேன். ஆயிரக்கணக்கானோரும் விலகுவர்.
“மலாய்க்காரர்களும் முஸ்லிம் என்ஜிஓ-களும் நடப்பு அரசாங்கத்தை நிராகரிக்கவும் தயங்க மாட்டார்கள் எனப் பெர்காசா நம்புகிறது”, என அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
காலம் கேட்டு விட்டது.. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் என்பது எவ்வளவு உண்மை. பிரதமர் அவர்களே, இந்த இனவாத கோமாளிக்கும் உமது அமைச்சரவையில் ஓரிடம் கொடுத்துவிடு. இல்லையேல் !!!!!!
(காலம் கெட்டுவிட்டது) என்று பொருள் கொள்ளவும்…
அம்னோவும் பெகாச வும் நடத்தும் கபட நாடகங்கள் !