மசீச தலைவர் லியோ தியோங் லாய் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் பிரதமர்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
அண்மையில் தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் வென்ற கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கும் பிரதமர்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
இவர்கள் தவிர்த்து மசீசவின் மூன்று உதவித் தலைவர்களும் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்பட்டனர். செனட்டர் லீ சீ லியோங் அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர், லாபிஸ் எம்பி சுவா டீ யோங் நிதி துணை அமைச்சர், சியு மெய் பன் மகளிர், குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர்.
சியு, தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் செனட்டராக்கப்பட்டு அமைச்சராக்கப்படுவார்.
புதிய அமைச்சர்கள் அனைவரும் ஜூன் 27-இல் பதவி ஏற்பர்.
இதுதான், இன்று பிற்பகல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த அமைச்சரவை மாற்றமாகும். மற்றபடி, அம்னோ அமைச்சர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
சொரணை மங்கி (மக்கி ) விட்டது.
என்ன அமைச்சன் தெரியுமா கொட்டை தாங்கும் அமைச்சணுங்க நல்லா டான்குவணுங்க தமிழனுக்கு ஆஅப்புடி எங்க தெலுக் இந்தன் தமிழனுக்கு wait அண்ட் C
இவர்களால் மக்களுக்கு ஒரு லாபமும் இல்லை , ஆனால் களுக்கு வருமானம் பெருகும்