இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையை அவரிடம் ஒப்படைக்க மறுப்பதற்காக போலீசார் அவரை கைது செய்யப்போவதில்லை என்று போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறுகிறார்.
மாறாக, அவரை கண்காணிப்பதற்காகவும் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் பேராக் போலீசார் அவரை தேடி வருகின்றனர் என்று காலிட் கூறினார்.
சிவில் அல்லது ஷரியா நீதிமன்றத்தின் தீர்ப்பு எதனையும் அமல்படுத்தபோவதில்லை என்ற அதன் நிலைப்பாட்டிலிருந்து போலீஸ் பின்வாங்கப்போவதில்லை என்று காலிட் கூறியதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
தீபா மற்றும் அவரது முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லா என்ற என். வீரன் விவகாரத்திலும் போலீஸ் அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்றும் காலிட் கூறுகிறார்.
“ஆகவே, நாங்கள் இரு நீதிமன்றங்களின் தீர்ப்பு எதனையும் அமலாக்கப் போவதில்லை. அது எங்களுடைய நிலைப்பாடு”, என்றார் காலிட்.
அவரது நிலைப்பாடு நீதிமன்ற அவமதிப்பாகாதா என்ற கேள்விக்கு பதில் அளித்த காலிட், “அது குறித்து நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும்”, என்றார்.
நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்திய போலீஸ் தலைவரை போன்று மற்ற மலேசிய குடிமக்களும் பின்பற்ற வேண்டும். அதேவேளை, தவறு செய்த ஒரு சாதாரண குடிமகனை கண்டுப்பிடிக்க இயலாத ஒரு போலீஸ் படை, உலகில் வேறெங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
நீங்கள் எந்த வேலையத்தான் ஒழுங்காக செய்திருகிறீர்கள் !!!
எருமை மாட்டை செரைக்கிற வேலைக்குதான் லாயக்கு.
அதையாவது ஒழுங்காக செய்வீர்களா ??? அல்லது எனக்கு
பெண் எருமை மாட்டை மட்டும்தான் செரைக்க தெரியும்
என்று கூறுவீர்களா ??? அப்படியே உங்களை நம்பி பெண்
எருமை மாட்டை செரைக்கிற வேலையை கொடுத்தால்கூட
அதை கண்காணிக்க ஒரு போலிஸ் படை வேண்டும்,
ஏனென்றால் அந்த பெண் எருமை கர்ப்பம் ஆகிவிட கூடாதல்லவா !!!
நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த முடியாதே நீர் எதற்கு காவல் துறை தலைவர் பொறுப்பில் இருக்க வேண்டும்?
ஐ ஜி பி பதவி விலக வேண்டும் ……………..சட்டத்திற்கு மதிப்பில்லை ………வெட்கப்பட வேண்டிய செயல்.நீதியை ஐ ஜி பி அவமதித்துள்ளார்.
ஐ ஜி பி அவர்களே நாங்களும் ( பொதுமக்கள் ) உங்களை போன்று நீதிமன்றத்தை மதிக்காமல் புறம் தள்ளலாமா ?
எல்லாம் தலைகனம் ,திமிர் பேச்சி….
நீதி மன்ற தீர்ப்பை அலட்சிய படுத்தும் ஒரு ஐ ஜி பி நாட்டிற்கு தேவைதான் ! நாடு நன்றாக விளங்கி விடும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டால் ஆகி விடலாம் !!
மடையன் BOLIH, MALAYSIA PULEH…..?
பொறுத்திருந்து பார்போம் , போலிஷ அல்லது நீதிமன்றமா
போலிஸ் தலைவரே, இங்கே எந்த நீதிமன்றம் பெரியது அல்லது தாழ்ந்தது என்பது பிரச்சனை அல்ல. ஒரு தகப்பனாரும் தாயாரும் நீதிமன்றத்தின் கட்டுக்குள் தங்களை ஆஜர் படுத்தி வாதிட்ட பிறகு அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட வேண்டும் என்பதே நியதி சட்டமும் ஆகும். அவ்வாறு இருவரும் சிவில் நீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பு பெற்ற பிறகு அதனை மதித்து நடப்பது நீதி. மாறாக அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை மிதித்து நடப்பது அநீதி. இது கூடவா தெரியாமல் அந்த தலைமை பதவியில் நீர் இருகின்றாய்?. இவ்வாறு நடந்துக் கொள்ள உமக்கு இந்நாட்டின் தலைமை அட்டார்னி ஜெனரல் ஆலோசனைக் கூறினாரா? அல்லது இது நீரே உமக்கு வேண்டிய படி சொல்லிக் கொள்ளும் தீர்ப்பா?. எங்கப்பா நம்ப வீராதி வீரன் சிவராஜ். இதை எதிர்த்து கொஞ்சம் பத்திரிகை அறிக்கை விடப்பா பார்ப்போம்!. உமக்கு கூஜா தூக்கியவர்கள் எல்லாம் காணாமல் தொலைந்து போய் விட்டார்களோ?
இரண்டு நீதிமன்றங்கள் மட்டும் அல்ல. இப்போது ஜெயிஸ், ஜாக்கிம் அவர்களுக்கும் அவர் செவி சாய்க்க வேண்டும். பதவி வேண்டுமென்றால் அவர்கள் சொல்லுவதைத் தான் அவர் கேட்டாக வேண்டும். வேறு வழியில்லை!
சபாஸ். யார் என்ன சொன்னால் என்ன? நான் IGP நான் வைத்ததுதான் சட்டம் என இறுமாப்புடன் நடந்து கொள்ளும் நீதான் நஜிப்புக்கு தேவை.
கடவுளே ..! இவன் எல்லாம் எப்படி போலிஸ் துறையில் அதிகாரியாய் இருக்க முடியும் ..? நீதியை நிலைநாட்ட தெரியாத உனக்கெல்லாம் எதற்கு போலிஸ் பதவி..? இப்படி பேச உனக்கு வெட்கமா இல்லை..? இப்படிப்பட்டவனுக்கு எப்படி இத்தனை மெடல் பதக்கம் உனக்கு கிடைத்து..? இப்படிப்பட்ட ஒரு ஐ ஜி பி நம் நாட்டிற்கு தேவைதான் !
இதுதான் முஸ்லிம் மலாய் பாகுபாடு இன்மை நீதி நியாயம்- அதிலும் என்ன மலாய் உரிமை என்று எனக்கு புரியவில்லை– சுதந்திரத்தின் பொது அவர்களுக்கு சில முன்னுரிமைக்காக மற்ற இரு இனத்தினரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் இப்போது எல்லாம் தலை கீழாக மாற்றி நம்மை எல்லாம் என்றுமே அடிமைகளாக வைத்திருக்க உரிமை என்ற போர்வையில் ஆட்டம் போடுகின்றனர்–அதிலும் MIC MCA ஜால்ராக்கள் இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. சின்பெங் இன்னும் உயிருடன் இருந்திருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் காரணம் அன்று சுதந்திரதிர்க்கு கையெழுத்து
போட்டவர்கள், முடியாது என்று சொல்லி இருந்தால்,இது போல
சிக்கல் நமக்கு வந்திருக்காது.
பெரிய ஒரு தில்லாலங்கடி