கர்பால் சிங், காலமானாலும் அவரது சேவை என்றும் நினைவுகூறப்படும். 40 ஆண்டுகள் அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு காந்தி அறவாரியம்(ஜிஎம்டி) பொதுச் சேவை விருதளித்துச் சிறப்பிக்கும் .
ஜூன் 30-இல், கோலாலும்பூர் அரச சிலாங்கூர் கிளப்பில் ஒரு சிறப்பு நிகழ்வில் அந்தப் பொதுச் சேவை விருது வழங்கப்படும் என்று ஜிஎம்டி தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் கூறினார்.
டிஏபி முன்னாள் தேசிய தலைவரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால், சிறந்த வழக்குரைஞர், நேர்மையான அரசியல்வாதி, எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதாபிமானி என்று இராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்தார்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது உமக்கு பொருந்தும். உமது கர்ஜிக்கும் சிங்கத்தின் தொணி உமது பிள்ளைகளின் மார்க்கம் நாடாளுமன்றத்தில் தொடரட்டும்!!!!
இந்த பட்டம் சாதாரண பட்டம் அல்ல மிகவும் சக்தி வாய்ந்தது இந்த பட்டம் பெரகூடியவர் எப்படி இருக்கனும் என்று ஒரு வரைமுறை வேண்டும்.
மறைந்த அந்த நல்லவரின் புகழ் மேலும் ஓங்கட்டும்.
கொள்கைவாதி .அரசாங்கமும் கட்சி ,இனம் பேதம்மின்றி இவரை ஒருநாள் கௌரவிக்கும் என எதிர்பார்ப்போம்