நஜிப் அப்துல் ரசாக், ஈராக்கில் இஸ்லாமிய அரசு பற்றியும் லெவாண்ட் பற்றியும் பேசியது தப்பாக அர்த்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது எனப் பிரதமர் அலுவலகம் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“ஐஎஸ்ஐஎல் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால், பிரதமர் ஐஎஸ்ஐஎல்-லுக்கு எந்த வகையிலும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். அவர் சொன்னதை மாற்றிக் கூறுவது தவறாகும்.
“மலேசிய அரசாங்கம் ஐஎஸ்ஐஎல்-லை ஒரு பயங்கரவாத அமைப்பாகத்தான் வகைப்படுத்தியுள்ளது. அதற்கு எதிராகவும் செயல்படுகிறது. உதாரணத்துக்கு, மலேசியாவில் ஐஎஸ்ஐஎல் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்துக்கு உரியவர்களைக் கைது செய்கிறோம்”, என்றந்த அறிக்கை கூறியது.