சிலாங்கூரின் நீர் பிரச்னைகளுக்கு ‘காலிட்டின் கருமித்தனமே’ காரணம்

ronnieசிலாங்கூரின் நீர்  பிர்சனைகளைத் தீர்க்க  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  பணம்  செலவிடத்   தயாராக இல்லை  என்றும்  அதன்  விளைவாகவே   அண்மையில்  சிலாங்கூரில்  நீர்  விநியோகம்  தடைப்பட்டது  எனவும்  முன்னாள்  ஆட்சிக்குழு  உறுப்பினர்  ரோனி  லியு  குற்றம்  சாட்டியுள்ளார்.

முந்தைய  ஆட்சிக்குழு  சிலாங்கூர்  நீர்  பிரச்னைகளைத்  தீர்க்க  பல  வழிமுறைகளை  முன்மொழிந்திருந்ததாக  சிலாங்கூர்  டிஏபி  விளம்பரப்  பிரிவுச்  செயலாளரான  ரோனி  லியு  தெரிவித்தார்.

“பிறகு  ஏன்  அவர் பிரச்னைகளைத்  தீர்க்கவில்லை? அப்பிரச்னைகளைத்  தீர்க்க  பணம்  செலவுசெய்ய  அவர்  தயராக  இல்லை  என்ற  அனுமானத்துக்குத்தான் வர  வேண்டியுள்ளது”,  என  லியு  குறிப்ப்ட்டார்.

நீர்  பிரச்னைக்குத்  தீர்வுகாண  பணம்  செலவிடத்  தயாராக  இல்லாத  நிலையில்  சிலாங்கூர்  மாநிலம் மூன்று  பில்லியனை  இருப்பில்  வைத்திருப்பதாக  பெருமையடித்துக்  கொள்வதில்  அர்த்தமில்லை   என்றாரவர்.