எல் நின்யோ காலத்தில் பினாங்கில் தண்ணீர் தடையின்றி கிடைக்கும்

pinangஉலகம்  எல் நின்யோவால்  பாதிக்கப்படும்போது-  மலேசியாவை  அது  ஜூன்  பிற்பகுதி  தொடங்கி  ஜூலை  முற்பகுதிவரை  தாக்கும்  என  எதிர்பார்க்கப்படுகிறது-  பினாங்கு  மக்கள்  குடிநீர்  தடையின்றி  கிடைக்கும்  என நம்பி  இருக்கலாம்.

பினாங்கில்  தண்ணீர்  பங்கீடு  செய்ய  வேண்டிய  அவசியம்  இருக்காது  என்றே  முதலமைச்சர்  லிம்  குவான் எங்  நினைக்கிறார். ஆனாலும்,  பிரச்னைகள்  அறவே  இருக்காது  என்று  சொல்ல  அவர்  தயாராக  இல்லை.

என்றாலும்,  பினாங்கில்  நீர்ப்  பங்கீடு  செய்ய  வேண்டிய  கட்டாயம்  ஏற்பட்டால்  அதற்குப்  பொறுப்பானவர்களின் “பதவி  பறிக்கப்படும்”  என்று  பினாங்கு  நீர்  விநியோக  கர்ப்பரேசன் (பிபிஏபிபி)  தலைவருமான  லிம்  கூறினார்.

“நீர்ப்  பங்கீடு  வரக்கூடாது  என்பதற்காக  பிபிஏபிபி  கோரிய எல்லாவற்றையும்  செய்து  கொடுத்திருக்கிறோம். நீர்  நிலவரம்  பற்றி  மாநில  நிர்வாக  மன்றத்துக்கு அவ்வப்போது  அறிக்கைகளைக்  கொடுக்க  வேண்டும்  என்றும்  கூறி  இருக்கிறோம்”,  என  லிம்  கூறினார்.

“பிபிஏபிபி  கேட்டதையெல்லாம்  செய்துகொடுத்திருப்பதால்  அவர்கள்  தங்கள்  பங்குக்கு  நீர்ப் பங்கீடு  இல்லாமல்  பார்த்துக்கொள்ள  வேண்டும்”,  என்று   கண்டிப்பாகக்  கூறினார்  அவர்.