திடீர் திருப்பம்: குழந்தை பராமரிப்பு உத்தரவை தள்ளிவைக்க முனைகிறார் ஏஜி

 

AG Ganiபெரும் இழுபறியில் இருந்து வரும் சமயங்களுக்கிடையிலான பராமரிப்பு விவகாரங்களில் சட்டத்துறை தலைவர் (எஜி) தலையிட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள பராமரிப்பு உத்தரவுகளை தள்ளிவைக்கும் நடவடிக்கையில் இறங்கவிருக்கிறார்.

இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் தயக்கும்Chronology of custoy case காட்டும் போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பாக்காரை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்கும் வகைசெய்யக்கூடியதாகவும் இருக்கும்.

இத்தலையீடு தேவைப்படுகிறது, ஏனென்றால் இவ்விரு வழக்குகளும் “சமய உணர்வுகள்” சம்பந்தப்பட்டதாக இருப்பதோடு, “பொதுஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று சட்டத்துறை தலைவர் கனி பட்டேயில் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

அதற்கும் அப்பால், இது ஓர் அரசமைப்பு சட்டப் பிரச்சனையாகியுள்ளது.

ஏஜி அலுவலகம் இந்த வழக்குகளில் தலையிடுவதற்காகவும் சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்கள் அளித்துள்ள உத்தரவுகளை தற்காலிகமாக தள்ளிவைப்பதற்காகவும் மனு செய்யும் என்று கனி கூறுகிறார்.

இவ்விரு வழக்குகளும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 121(1A)யின் கீழ் ஷரியா மற்றும் சிவில் நீதிமன்றங்களின் நீதிபரிபாலன அதிகாரங்கள் சம்பந்தப்பட்டதாகும்.

இந்த தலையீடு நடவடிக்கையின் மூலம் இவ்விரு வழக்குகளுக்கும் இறுதியான தீர்வை காண்பதும், அனைவருக்கும் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதாகும் என்றும் அவர் கூறினார்.