மிக அண்மையில் சிலாங்கூரில் நீரளிப்புத் தடைப்பட்டது மன்னிக்க முடியாதது என்றும் அது மாநில அரசின் திறமைக்குறைவால் ஏற்பட்ட தவறு என்றும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.
வறட்சிக் காலம் பற்றி நெடுங்காலத்துக்கு முன்பே முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ள வேளையில், “நீரின் அளவு குறைவதற்கு எதிராக தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யாததற்கு எந்தக் காரணத்தைக் கூறினாலும் எடுபடாது”, என்று புவா ஓர் அறிக்கையில் கூறினார்.
“இந்தத் திறமைக்குறைவு மந்திரி புசாரையும் மாநில அரசையும் சங்கடமான நிலைக்கு ஆளாக்கி இருப்பதுடன் பக்காத்தான் ரக்யாட்டின் நம்பகத்தன்மையையும் கெடுத்து விட்டது”, என்றாரவர்.