சிலாங்கூரின் தண்ணீர் நெருக்கடிக்கு அம்மாநில பக்காத்தான் ரக்யாட் அரசின் திறமைக்குறைவுதான் காரணம் என்று டிஏபி எம்பி டோனி புவா குறிப்பிட்டது குறித்து நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவர், சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைத் தாக்குவார் என்று பார்த்தால் அன்வார் இப்ராகிமைச் சாடினார்.
அன்வார், சிலாங்கூரின் பொருளாதார ஆலோசகர்.
“சிலாங்கூர் நீர் நெருக்கடி தொடர்பில் சிலருடைய பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என டோனி புவா கூறியுள்ளார்……..அது சரிதான்… தயவுசெய்து மாநிலப் பொருளாதார ஆலோசகரிலிருந்து அதைத் தொடங்குங்கள்”, என்று அந்த கோத்தா பெலூட் எம்பி டிவிட்டரில் கூறி இருந்தார்.
இதற்கு ஒரு பயனர், “இதையே அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையின்படி பல அமைச்சுகள் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது தெரிய வருவதால் பிரதமரும் பதவி விலக வேண்டும்….சரியா?”, என்று எதிர்வினையாற்றினார்.