ஏஜி-இன் முயற்சிகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை

muraliவெவ்வேறு  இனத்தவர்  சம்பந்தப்பட்ட  குழந்தைப்  பராமரிப்பு  விவகாரத்தில் தலையிட்டு  ஒரு  தீர்வுகாண   சட்டத்துறைத் தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்ல்  உத்தேசித்தாலும்கூட, அரசியல்  தலைமைக்குச்  சட்டங்களில்  திருத்தம்  செய்யும்  துணிச்சல் இல்லாதவரை  அவ்விவகாரத்துக்குத்  தீர்வுகாண   இயலாது  என்கிறார்  ஒரு  வழக்குரைஞர்.

கூட்டரசு  அரசமைப்பிலும்  கூட்டரசு, மாநிலச்  சட்டங்களிலும் மைனர்கள் ஒருதலைப்பட்சமாக   மதமாற்றம்  செய்யப்படுவதைத்  தடுக்க  திருத்தங்கள்  செய்யப்பட்டாலொழிய  ஏஜி-இன்  முயற்சிகள்  விழலுக்கு  இரைத்த நீர்தான்   என  மூத்த  வழக்குரைஞர்  முரளி  மேனன் (இவரும் மதம்  மாறியவர்தான்) கூறினார்.

சட்டத்  திருத்தம்  செய்ய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தயங்குகிறார்  என்றாரவர்.

“அதனால்  மலாய்,  முஸ்லிம்  ஆதரவை  இழக்க  நேரும்  என  நஜிப்  அஞ்சுகிறார்  போலும்.

“ஆனால், இப்போதுள்ள  முட்டுக்கட்டையைத்  தீர்க்க  இது  ஒன்றுதான்  வழி”,  என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.