வழக்குரைஞர் மன்றம்: பெற்றோர் ஒப்புதல் தேவை என்பதை அரசமைப்பு தெளிவாகச் சொல்கிறது

christopherஉரிய  வயதுக்கு  வராத  பிள்ளைகளின்  சமயத்தை  முடிவுசெய்வதில்  பெற்றோர்  இருவரின்  இணக்கமும்  தேவை  என்பதில்  அரசமைப்புத்  தெளிவாக  உள்ளது  என்கிறார்  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்.  அதை நம்பாதவர்கள்  ஒன்று  புரியாதவர்களாக  இருத்தல்  வேண்டும்  அல்லது  “புத்தி மழுங்கியவர்களாக”  இருத்தல்  வேண்டும்  என்றாரவர்.

“கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி  12(4), பகுதி  160,  11வது  அட்டவணை  ஆகியவை  பிள்ளைகளின்  சமயத்தை  நிர்ணயிப்பதில்  பெற்றோர்  இருவரின்  சம்மதமும்  தேவை  என்பதைத்  தெளிவாக  சொல்கின்றன”,  என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.