மாட்டுத்தலை விவகாரம்: ஜாஹிட்டைச் சாடியது கெராக்கான்

baljitஸ்ரீ  டெலிமா  சட்டமன்ற  உறுப்பினரின்  வீட்டில்  மாட்டுத்  தலை  வீசி  எறியப்பட்டிருந்த  சம்பவம்  குறித்த  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடியின்  கருத்து  இந்துக்களின்  மனத்தைப்  புண்படுத்தும்  கருத்து  என  கெராக்கான்  சாடியுள்ளது.

ஆர்.எஸ்.என். இராயரின்  வீட்டின்  முன்புறம்  வெட்டப்பட்ட  மாட்டுத்  தலை வீசி  எறியப்பட்டிருந்தது  பற்றிக்  கருத்துரைத்த  ஜாஹிட்,  அது  “அம்னோ  செலாகா”  என்றுரைத்ததற்காக  அவர்  கொடுத்த  “விலை”  என்று  கூறி இருந்தார்.

உள்துறை  அமைச்சர்  என்ற  முறையில்  ஜாஹிட்  அமைதியையும்  இணக்கத்தையும்  வளர்க்க  வேண்டுமே  தவிர  வன்முறையை  ஊக்குவிக்கக்  கூடாது  என  கெராக்கானின்  சட்ட  விவகார,  மனித  உரிமைப்  பிரிவுத்  தலைவர்  பல்ஜிட்  சிங்  குறிப்பிட்டார்.

“இது  இந்துக்களை  உணர்ச்சிவசப்பட  வைக்கும்  சம்பவம். உள்துறை  அமைச்சர்  பொறுப்புடன்  நடந்து  கொள்ள  வேண்டும்.

“வெவ்வேறு  சமயத்தவரிடையே  பகைமையைத் தூண்டிவிடக்கூடாது.  அதுவும்  நோன்பு  மாதம்  தொடங்க  இன்னும்  ஒரு  நாள்  உள்ள  வேளையில்  அப்படியெல்லாம்  அவர்  செய்யக்கூடாது”,  என பல்ஜிட்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.