ஐஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுகிறார் குலா

Kula-IGP contemptகுழந்தை பராமரிப்பு சம்பந்தப்பட்ட வழக்கில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்காருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடரப்போவதாக வழக்குரைஞர் எம். குலசேகரன் கூறினார்.

சமயம் சம்பந்தப்பட்ட பராமரிப்பு வழக்கில் குழந்தையின் தாயாரான இந்திரா காந்தியைப் பிரதிநிதிக்கும் குலசேகரன் அந்த வழக்கு சம்பந்தமாக ஈப்போ உயர்நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளை அமல்படுத்தத் தவறியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

இந்த உத்தரவுகளில் இந்திராவின் முன்னாள் கணவர் கே. பத்மநாதன் என்ற ரிட்ஸ்வான் அப்துல்லாவை கைது செய்தல் மற்றும் இந்திராவின் குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்டு வருதல் ஆகியவையும் அடங்கும்.

உலகத்தில், நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணையை அமலாக்க மறுக்கும் ஒரே ஐஜிபி இவராகத்தான் இருக்க வேண்டும் என்று இன்று ஈப்போவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய குலா ஐஜிபியை சாடினார். குலாவுடன் அவருடைய கட்சிக்காரர் இந்திரா காந்தியும் உடனிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை ஐஜிபி காலிட் அமல்படுத்தியிருந்தால் இந்திரா காந்தியின் இக்கட்டான நிலையை சுலபமாக தீர்த்திருக்க முடியும் என்றாரவர்.

நீதிமன்ற உத்தரவுகளை ஐஜிபி அமல்படுத்தியிருந்தால் சட்டத்துறை தலைவர் இதில் குறுக்கிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.najib

 

பிரதமரின் தவறான ஆலோசனை

 

“இன்று, ஐந்து ஆண்டுகால நீண்ட போராட்ட போராட்டத்தின் விளைவால் மன வேதனைக்கும், இன்னல்களுக்கும் ஆளான இந்திரா அவருடைய குழந்தையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதுமன்ற உத்தரவையும் பெற்றுள்ளார். இருந்தும், ஐஜிபி நடவடிக்கை எடுக்காததாலும், பிரதமர் நஜிப்பின் தவறான ஆலோசனையாலும், சட்டத்துறை தலைவர் மேற்கொண்டுள்ள தவறான நடவடிக்கையாலும் இந்திரா காந்தி அடைந்துள்ள மனக்காயமும் பெரும் மன வேதனையும் இன்னும் தீர்ந்தபாடில்லை”, என்று குலா மேலும் கூறினார்.