டிஎபி: ஹமிடி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்

Hamidi -unsuitable1பிரதமர் நஜிப் அவரது உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக அவரை வேறொரு துறைக்கு மாற்ற வேண்டும் என்று இன்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த டிஎபி உதவித் தலைவர் தெரசா கோக், “வரலாற்றில் மிகப் பொருத்தமற்ற உள்துறை அமைச்சர் ஹமிடி” என்று அவர் ஹமிடியயை வர்ணித்தார்.

“அவருக்கு எது சரி அல்லது தவறு என்று சொல்லத் தெரியாது என்பது தெளிவானதாக இருக்கிறது. அவர் நாட்டில் சட்டத்தின் ஆளுமை, அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான கடப்பாட்டை கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது”, என்று தெரசா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

சமீபத்தில், டிஎபி ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் வீட்டின் முன் வீசப்பட்டிருந்த மாட்டுத் தலை சம்பவத்தை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

ஹமிட்டின் இதர பல பொறுப்பற்ற மற்றும் அடாவடித்தனமான செயல்கலையும் தெரசா சுட்டிக் காட்டினார். அவர் உள்துறைHamidi -unsuitable2 அமைச்சராக பதவி ஏற்ற ஒரு வருட காலத்தில் சில இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் தெரசாவை அறைவோம் என்று விடுத்த மிரட்டலை உதாசீனப்படுத்தியது மற்றும் குற்றச்செயல் கும்பங்களை எதிர்கொண்டால் “முதலில் சுடுங்கள்” என்று அவர் போலீசாருக்கு கூறியது ஆகியவை அவற்றில் அடங்கும்.

“மற்ற ஜனநாயக நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியா அல்லது யுனைட்டெட் கிங்டம் ஆகியவற்றில் ஓர் அமைச்சர் “முதலில் சுடுங்கள்” என்று கூறியிருந்தால், அவரது பதவி நிச்சயமாக பறிபோயிருக்கும்”, என்று தெரசா மேலும் கூறினார்.

நஜிப்பிற்கு அவரது அமைச்சரவை சீர்திருத்துவதற்கான அரசியல் திண்மை அவரிடம் இல்லை. அதனால், ஹமிட்டை அகற்ற இயல்வில்லை என்றாரவர்.