ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர் வீட்டுக்குமுன் இரத்தம்-வடியும் மாட்டுத்தலை ஒன்று வீசி எறியப்பட்டிருந்தது தொடர்பில் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்த கருத்து “இஸ்லாத்துக்கு ஏற்புடையதன்று” என மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம்(அபிம்) கூறியது.
அது, “தெள்ளத் தெளிவாக இந்துக்களை அவமதிக்கிறது” என அபிம் தலைவர் அமிடி மனான் ஓர் அறிக்கையில் கூறினார்.
“அவருடைய (ஜாஹிட்டின்) எதிர்வினை இஸ்லாமிய போதனைகளைப் பிரதிபலிக்கவில்லை. இஸ்லாம் மற்ற சமயங்களை மதிக்கச் சொல்கிறது. மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதைக் கண்டிக்கிறது”, என்றாரவர்.
இஸ்லாத்துக்கு ஏற்புடையதல்லாத கருத்தையும் அவருடைய (ஜாஹிட்டின்) எதிர்வினை இஸ்லாமிய போதனைகளைப் பிரதிபலிக்கா வண்ணம் கருத்துகளை வெளிப்படுத்திய இவனெல்லாம் ஒரு உண்மையான இஸ்லாமியரா என்று சிந்திக்கத் தோன்றுகிறது…
நன்றி அபிம்
இவனுக்கும் மனித நேயம் கிடையாது ,,, மத வெறிதான்
இந்த ஜகிட் ஹமிடி அமைச்சராக பொறுப்பு வகிக்க தகுதி இல்லாதவர்.இவர் அம்னோவில் ஒரு தலைவாராக மட்டும் இருக்கலாம்.உள் துறை அமைச்சர் என்பது நாட்டுக்கு , இந்த பொறுப்பில் இருந்து பராபட்சை இல்லாமை நாட்டை வலி நடத்தும் தகுதி இந்த ஜகிட்டுக்கு கிடையாது.இனங்களுக்கு இடையில் பகைமை வளர்க்கும் அளவுக்கு அறிக்கை விடும் இத்தகையோரர் அமைச்சர் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள்.ஆகவே அமைச்சர் ஜகிட் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மலாய் இன வேரியாராக நாட்டில் வளம் வரலாம்.ஜகிட்டே பத்தி விலகு என்று நாட்டு மக்கள் வேண்டு கொள் விடுக்கா வேண்டும் என்று ஜனநாயக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.