யுஎம்சிடெல் தலைவர் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்; சைபுடினும் பதவி விலகல்

umcdelமலாயாப்  பல்கலைக்கழகத்தின்  ஜனநாயக,  தேர்தல்  மையத்தின் (யுஎம்சிடெல்)  இயக்குனர்,  ரிட்சுவான்  ஒத்மான்  பதவி  விலகுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

ரிட்சுவானின்  பல்கலைக்கழக  கலை, சமூக  அறிவியல்  புலத்தின்  தலைவர்  பணி  இன்றுடன்  முடிவுக்கு  வருகிறது. அது  புதுப்பிக்கப்படவில்லை.

அவர் “பேராசிரியர்  பணியிலிருந்து ஓய்வுபெறுவதால்”  அவருடைய  யுஎம்சிடெல்  இயக்குனர்  பணியைப்  புதுப்பிப்பதில்லை  என்ற  முடிவுக்குப்  பல்கலைக்கழகம்   வந்துள்ளது.

இதனிடையே,  ரிட்சுவானுக்கு ஏற்பட்டுள்ள  நிலையைக்  கண்டித்த  முன்னாள் உயர்கல்வி  துணை  அமைச்சர்  சைபுடின்  அப்துல்லா,  தாமும்  யுஎம்-மின்  உயர் ஆய்வாளர்  பதவியிலிருந்து  விலகிக்  கொண்டிருப்பதாக  அறிவித்திருக்கிறார்.  ரிட்சுவானின்  ஆய்வு  முடிவுகள் பல  வேளைகளில்  ஆளும்  பிஎன்  அரசாங்கத்துக்குச்  சாதகமாக  இருந்ததில்லை  என  சைபுடின்  மலேசியாகினியிடம்  கூறினார்.