மகாதிர்: தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றினால் குழப்பம் உண்டாகும்

dr mமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  தேச  நிந்தனைச்  சட்டத்தை  அகற்றிவிட்டு  அதனிடத்தில்  நல்லிணக்க, ஒற்றுமை  சட்டங்களைக்  கொண்டு  வந்தால்  குழப்பம்தான்  உருவாகும்  என்று  கூறுகிறார்.

தேச  நிந்தனைச்  சட்டம்  இல்லை  என்ற  நிலையில், “தீவிரவாதிகள்”  நாட்டில்  முடியாட்சி  குறித்து  கேள்வி  எழுப்புவார்கள், முடியாட்சியை  ஒழிக்க  வேண்டும்  என்றுகூட  கோரிக்கை   விடுப்பார்கள்  என மகாதிர்  தம்  வலைப்பதிவில்  கூறினார்.

“அதனால்  நாட்டில்  குழப்பம்  சூழலாம்.  பரந்த  மனப்போக்கைக்  கொண்டிருந்தால்  இதுதான்  நடக்கும்”, என்றவர்  எச்சரித்தார்.