சிஜே: ஒற்றுமை மன்றத் தலைவர் பதவியை மறுத்தேன்

ex cjமுன்னாள்   தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகம்மட்,  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்ற (என்யுசிசி)  தலைவர்  பதவியை  ஏற்குமாறு  தாம்  கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும்  ஆனால்  அதை  மறுத்து  விட்டதாகவும்  கூறினார்.

“மலாய்  இனத்துக்கும்  இஸ்லாத்துக்கும்  துரோகியாகி  விடுவேன்  என்று  பயந்தேன்”, என்றவர்  கூறியதாக  பெர்னாமா  மேற்கோள்  காட்டியுள்ளது.

மன்றத்தில்  இருப்பவர்கள்  பற்றித்  தகவல்  அறிந்த  பின்னரே  தாம்  பயந்ததே  சரியே  என்பதை  உணர்ந்ததாகவும்  அப்துல்  ஹமிட்  கூறினார்.

“மன்றத்தின்  மலாய்,  முஸ்லிம்  உறுப்பினர்கள்  தாராள  மனப்போக்குக்  கொண்டவர்கள்  என்பதால்  கூட்டரசு  அரசமைப்பு  வழங்கும் (பூமிபுத்ரா)  உரிமைகளைப்  பாதுகாக்க  முனைய  மாட்டார்கள்,  விரும்பவும்  மாட்டார்கள்”,  என்றாரவர்.