அனிபா: நியு சிலாந்துதான் தூதரக அதிகாரியைத் திருப்பி அழைத்துக்கொள்ளச் சொன்னது

anipahநியு  சிலாந்து  அதிகாரிகள்தான்  பாலியல்  குற்றம்  சாட்டப்பட்ட மலேசிய  தூதரக  அதிகாரியைத் திருப்பி  அழைத்துக்கொள்ள  ஆலோசனை  தெரிவித்தார்கள்  என்கிறார்  வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்.

இப்போது  அந்த  அதிகாரியின்மீது  தற்காப்பு  அமைச்சு  மனோவியல்  சோதனைகளை  நடத்தி  வருவதாகக்  கூறிய  அமைச்சர்,  அவர் குற்றவாளி  எனத்  தெரிய வந்தால்  மலேசிய  இராணுவ  நீதிமன்றம்  அவருக்கு  எதிராக  நடவடிக்கை எடுக்கும்  என்றார்.

எப்படிப்பட்ட  நடவடிக்கை  என்பதை அவர்  விவரிக்கவில்லை.