பினாங்கில் புதிதாக யாரும் ஜெஇ நோயால் பாதிக்கப்படவில்லை

jeபினாங்கு  தாசெக் குளுகோரில்  12-வயது  சிறுவன்  ஜப்பானிய  என்சிபலைடிஸ் (ஜெஇ) நோயால்  பாதிக்கப்பட்டிருக்கலாம்  என்ற  சந்தேகத்தை  அடுத்து  வேறு  யாரும்  அந்நோயால்  பாதிக்கப்பட்டிருப்பதாக  இதுவரை  கண்டுபிடிக்கப்படவில்லை.

பொதுமக்கள்  கவலையுற  வேண்டாம்  என்று  கூறிய பினாங்கு  சுகாதாரத்  துறை  இயக்குனர்  டாக்டர்  லைலானுர்  இப்ராகிம்,  அப்பகுதியில்  கட்டுப்பாட்டு, தடுப்பு  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு  வருவதாக  தெரிவித்தார்.

எனினும்,  காய்ச்சல்,  தலைவலி, குமட்டல்,  வாந்தி  போன்ற  அறிகுறிகள்  இருந்தால்  பொதுமக்கள்  உடனடியாக  மருத்துவ உதவியை  நாட  வேண்டும்  என்றவர்  கேட்டுக்கொண்டார்.