ஜைட்: முன்னாள் சிஜே ஒற்றுமையில் குறைகாண்பவர்

zaidமுன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகம்மட்டின்  கருத்து  முன்னாள்  சட்ட  அமைச்சர்  ஜைட் இப்ராகிமுக்குக்  கொஞ்சமும்  வியப்பளிக்கவில்லை.

முன்னாள்   தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகம்மட்,  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்ற (என்யுசிசி)  தலைவர்  பதவி தமக்குக்  கொடுக்கப்பட்டதாகவும்  ஆனால்,  அதை  மறுத்து  விட்டதாகவும்  கூறினார்  என  இதற்குமுன்  பெர்னாமா  அறிவித்திருந்தது.

அப்துல்  ஹமிட்  பணி ஓய்வு  பெற்றதும்  அவர்  “ஒற்றுமை  என்ற  கருத்தைக்  குறைசொல்பவராக  மாறிவிட்டார்”  என்கிறார்  ஜைட்.

“அவர் (அப்துல் ஹமிட்) ஒரு  இஸ்லாமிய  அரசு  அமைவதைத்தான்  விரும்புகிறார்”, என்றாரவர்.

முதலில், அவருக்கு என்யுசிசி  தலைவர்  பதவி  வழங்கப்பட்டிருக்கவே  கூடாது  என்று  ஜைட்  கூறினார்.

“அக்கருத்தின் (ஒற்றுமை) மீது  நம்பிக்கை  கொண்ட  ஒருவரைதான் (அப்பதவிக்கு)  நியமிக்க  வேண்டும்  முரணான  கருத்துக்  கொண்ட  ஒருவரை  நியமிக்கக்  கூடாது”,  என்றாரவர்.

அப்துல்  ஹமிட்  அரசியல்  சார்புள்ளவர்.  அவர்  அரசியலுக்குச்  செல்வதுதான்  உகந்தது  என்றும்  ஜைட்  குறிப்பிட்டார்.